எலிக்காய்ச்சல் (Leptospirosis) உலகம் முழுவதும் காணப்படும் தொற்றாக இருக்கின்றது. ஆண்டுதோறும் சுமார் 1.03 மில்லியன் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 58,900 பேர் மரணமடைகிறார்கள். இது 20-49 வயதுக்குட்பட்ட இளம் ஆண்களில் அதிகமாகப் பதிவாகிறது. இது ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகக் கருதப்படுகிறது.
இலங்கையில், இந்த நோய் மழைக்காலத்திற்கு பிறகு பொதுவாக காணப்படுகிறது. நெல் பயிரிடும் பருவங்களுடன் தொடர்புபட்டு, குறிப்பாக அறுவடையின் போது மழை பெய்தால் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கின்றன. வெள்ளம் ஆகியவையின் பின்னர் நோய் பரவல் அதிகமாகும்.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் கழிவுநீர் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளவர்கள். நீர்நிலைகளில் பொழுதுபோக்காக ஈடுபடுபவர்களும் இதில் அடங்குவர்.
எலிக்காய்ச்சல் என்பது Leptospira என்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும். இது கொறித்துண்ணிகள் மற்றும் விலங்குகளின் சிறுநீரில் காணப்படுகிறது. மண் மற்றும் நீர் மூலம் பரவுகிறது. லெப்டோஸ்பைரா ஈரமான சூழலில் நீண்ட நாட்கள் உயிர்வாழக்கூடியது.
மழை அல்லது வெள்ளத்திற்குப் பிறகு மாசுபட்ட நீர் மற்றும் மண்ணால் நோய்த்தொற்று ஏற்படுகிறது. சிராய்ப்பு தோல், மூக்கு, வாய் மற்றும் கண்களின் சளி சவ்வுகள் வழியாக நுழைகிறது.
அறிகுறிகள் 5-14 நாட்களில் தோன்றலாம். காய்ச்சல், தலைவலி, தசைவலி, கண்கள் சிவத்தல், மூச்சு சிரமம், மஞ்சள் காமாலை போன்றவை உள்ளன. சிலருக்கு சிறுநீரகம், இதயம் பாதிக்கப்படலாம்.
எலிக்காய்ச்சல் ஆரம்பத்தில் கண்டறிந்து நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கொடுக்கப்பட்டால் குணமாகும். சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
விவசாயம், சுரங்கம், கழிவுநீர் தொழில்கள் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகளும் அவசியமாகின்றன.